ஹோட்டலுக்கு 'காபி' குடிக்க போனபோது பொன்னையனின் காஸ்ட்லி செல்போன் 'அபேஸ்'
அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையனின் செல்போன் திருடப்பட்டுள்ளது. அவர் காபி குடிக்க சென்றபோது மர்மநபர்கள் யாரோ அவரது செல்போனை திருடியுள்ளனர்.
சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் செல்போன் திருடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகரான பொன்னையனின் விலையுயர்ந்த செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக செய்திதொடர்பாளரான பொன்னையன் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஹோட்டலுக்கு இன்று காலை காப்பி குடிக்கச் சென்றுள்ளார்.

அவரது டேபிளுக்கு காபி வந்தவுடன் கையில் இருந்த தனது விலையுயர்ந்த செல்போனை டேபிள் மேல் வைத்துவிட்டு அவர் காபி குடித்துள்ளார். காபி குடித்து முடித்தவுடன் பொன்னையன் தனது செல்போனை எடுக்க முயன்றார்.
அப்போது டேபிளின் மேல் வைத்திருந்த செல்போன் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹோட்டலில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து செல்போனை திருடியவரை தேடி வருகின்றனர்.
ஆளும் கட்சி பிரமுகரின் செல்போன் ஹோட்டலில் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அதிமுக நிர்வாகிகளின் உடைமைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றும் மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications