ஆய்.. கனடாவிலிருந்து பேசுறேன்.. கலகலன்னு போகுது.. அங்க எப்படி.. இங்க டைட்டா போகுதுண்ணே!
சென்னை: முன்பெல்லாம் கண்மாய், ஏரி, குளத்துக்குப் போனோமா, "எரு"வைப் போட்டோமா வந்தோமான்னு இருந்தார்கள். இன்றோ, டாய்லெட்டுக்குப் போய் விட்டு வர ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் பலர். அதற்குள் பேப்பரை படித்து முடித்து, வாட்ஸ் ஆப்பில் வந்ததைப் பார்த்து விட்டு, குட்மார்னிங் ஹேவ் எ நைஸ் டே வரைக்கும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸும் போட்டு விட்டு வருகிறார்கள். அப்படியாகி விட்டது இன்றைய காலை கடன் சமாச்சாரம்.
இப்படிப்பட்டவர்களைக் குறி வைத்து ஒரு ஆப் வந்து வி்ட்டது. காலைக் கடன் கழித்துக் கொண்டே "செல்லை" நோண்டிக் கொண்டிருப்போருக்கான ஆப் இது.
இந்த ஆப்பை செல்போனில் பொருத்தி விட்டால் போதும், "ஆராம்சே" ஆய் போய்க் கொண்டே, நம்மைப் போலவே எங்காவது "ஆய்" போய்க் கொண்டிருப்பவர்களுடன் "சாட்" செய்து கொண்டே ஜாலியாக "கழிக்கலாமாம்".

பூடக்டிவ்
இந்த ஆப்புக்கு பூடக்டிவ் (Pooductive) என்று ரொம்பப் பொருத்தமாக பெயர் வைத்துள்ளனர். இந்த ஆப்பை கிக்ஸ்டார்ட்டர் மூலமாக அறிமுகப்படுத்தினர் முதலில். ஆனால் போதிய நிதியில்லாமை காரணமாக அது தோல்வியில் முடிந்தது.

ப்ரீயாவே
இந்த நிலையில், ரிக்கார்டோ கிரூபர் என்ற டெவலப்பர் இதை மேலும் பொலிவுபடுத்தி இலவசமாகவே வெளியிட்டுள்ளார். தங்களது டாய்லெட் பழக்க வழக்கங்களை மக்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இதை அறிமுகப்படுத்தியதாக கிரூபர் கூறுகிறார்.

முக்காவாசிப் பேர் பேசிக் கொண்டே
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி உலக அளவில் டாய்லெட் போவோரில் 75 சதவீதம் பேர் செல்போனைப் பார்க்கிறார்களாம். பிரவுஸ் செய்வது, மெயில் அனுப்புவது, டெக்ஸ்ட் அனுப்புவது உள்ளிட்டவற்றை ஆய் போய்க் கொண்டே செய்கிறார்களாம்.

கான்பரன்ஸ் கால் வேற
90 சதவீதம் பேர் போனில் பேசிக் கொண்டே ஆய் போவதாக கூறியுள்ளனர். அதை விடக் கொடுமை, கான்பரன்ஸ் காலில் பேசுவதாக 5 சதவீத ஆண்கள் கூறியதுதான்.

இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்காக
இப்படிப்பட்ட பிரஜைகளுக்காகவே இந்த பூடக்டிவ் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார் கியூபர். உள்ளூர் மற்றும் வெளியூரில் உள்ள நண்பர்கள், அறிமுகம் இல்லாதவர்களுடன் கூட இதன் மூலமாக பேச முடியும் என்று சொல்கிறார் கியூபர்.

மே ஐ கம் இன்
யார் யார் டாய்லெட்டில் உள்ளனர் என்பதை இதில் தெரிந்து கொள்ள முடியும். பின்னர் அவர்களுடன் சாட்டை தொடங்க முடியும். உலகின் எந்த மூலையிலிருந்தும் சாட் செய்ய முடியும் என்று கூறுகிறார் கியூபர்.

கிரியேட்டிவ் கூடம் பாஸ்..!
கியூபர் இதுகுறித்து மேலும் கூறுகையில், கழிப்பறையை சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. கிரியேட்டிவ் எண்ணங்கள் பெரும்பாலும் இங்குதான் பலருக்கும் தோன்றும். இந்த இடத்தில்தான் நிறைய சிந்திக்க வாய்ப்பு கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகளுக்கும் இங்குதான் வாய்ப்புகள் அதிகம்.

சிந்தாம சிதறாம ஷேர் பண்ணுங்க
அப்படிப்பட்ட சமயத்தில் தோன்றும் வித்தியாசமான விஷயங்களை தங்களைப் போலவே டாய்லெட்டில் அமர்ந்திருப்போருடன் பகிர்ந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாகும். இதுவும் வாட்ஸ் ஆப் போல, பிற சாட் வகைகளைப் போலத்தான்.
அடேங்கப்பா.. அடுத்து தண்ணியை ஊற்றி கழுவி விடவும் "ஆப்" வந்தாலும் வரலாம்...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications