ஜெ. பிறந்த மகம் நட்சத்திரம்... 122 கோவில்களில் ஹேமங்கள்... அர்ச்சனைகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பிறந்த மாசி மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சகஸ்ரநாம அர்ச்சனை, சுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், நவசக்தி ஹோமம், ருத்திர திரிசதி பூஜை, ஆயுஷ்ய ஹோமம், நவகலச பூஜை, ருத்திரயாகம் ஆகிய சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களை இன்று இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குரு பகவான் சிம்ம ராசியிலும், கதிரவன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் போது வரும் பவுர்ணமி தினத்தன்று மக நட்சத்திரத்திலும், ரிஷப லக்னத்திலும் கூடும் புண்ணிய நாளான 22-ந் தேதி (இன்று) மகாமகம் ஆகும். இந்நாளில் கும்பகோணத்தில் மகாமக தீர்த்தவாரி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நாளில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு திருக்கோவில்களிலும் மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த புண்ணியத் திருநாளில் முதல்-அமைச்சரின் பிறந்த நட்சத்திரம் என்பதும் மற்றுமொரு சிறப்பாகும். இதன் சிறப்பு கருதி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 122 திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
22-ந் தேதியான இன்று (திங்கட்கிழமை) பழநி தண்டாயுதபாணி திருக்கோவிலில் சண்முகா அர்ச்சனை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஒன்பது வகை மலர்களால் மீனாட்சி அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனையும், சுந்தரேசுவரருக்கு ஐந்து வகை மலர்களால் பஞ்சமுக அர்ச்சனையும், மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நவகலச பூஜை, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் ருத்ர பாராயணமும், சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் சுதர்சன ஹோமமும் என தமிழ்நாட்டிலுள்ள 122 திருக்கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.
மேலும் சகஸ்ரநாம அர்ச்சனை, சுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், நவசக்தி ஹோமம், ருத்திர திரிசதி பூஜை, ஏகதின லட்சார்ச்சனை, மாலா மந்திர மூல மந்திர யாகம், மாதுளை முத்துக்களால் அபிஷேகம், ஆயுஷ்ய ஹோமம், நவகலச பூஜை, ருத்திரயாகம் ஆகிய சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு திருக்கோவில்களில் நடைபெறுகின்றன. பொது மக்கள் அனைவரும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று இறைவன் திருவருளால் எல்லா நலமும் பெற இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications