For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் கனமழை... பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு - சென்னை குடிநீர் பிரச்சினை தீரும்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வருவதால் அதன் கொள்ளளவு அதிகரித்து வருகிறது.

ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அம்மப்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு 3500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Poondi Lake's water level increases

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு 121 கனஅடி நீர் வரத்து உள்ளது. 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 150 மில்லியன் கனஅடி நீர் மட்டம் உள்ளது.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரி கடந்த சில மாதங்களுக்கு முன் வறட்சியால் வறண்டு போனது. தற்போது நீர் வரத்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Poondi Lake in Thiruvallur District water level increases as water bodies in Andhra filled with water due to heavy rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X