சிவாவை கோபப்படுத்தும் சக்தி... ஜீ தமிழ் பூவே பூச்சூடவா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில், காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த "பூவே பூச்சூடவா" என்ற தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.

வரும் வாரங்களில் சுவாரஸ்யமான அத்தியாயங்களுடன் இத்தொடர் நேயர்களை உற்சாகப்படுத்த உள்ளது.

பூவே பூச்சூடவா, இதமான காதல் கதை. சாதாரண பஸ் கண்டக்டரின் மகளான சக்தி படிப்பை முடித்துவிட்டு தன் அம்மா நடத்தும் கேட்டரிங் சர்வீஸுக்கு உதவியாக இருக்கிறாள்.

ரொம்பவும் துருதுருவென ஓடி ஆடும் சக்தி மனதில் பட்டதை வெடுக்கென்று பேசும் குணம் கொண்டவள். ஒரு விபத்தில் சக்தி சிவாவை சந்திக்கிறாள்.

சிவா - சக்தி

சிவா - சக்தி

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவில் தொழில் தொடங்க நினைக்கும் சிவா கோப சுபாவம் கொண்டவன். யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பழகிவிட மாட்டான். குறிப்பாக பெண்கள் என்றாலே சிவாவிற்கு வெறுப்பு. விபத்தில் சிவாவும், சக்தியும் மோதிக்கொள்வதில் ஆரம்பித்து, எப்படி காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது தான் கதை

வேலைக்கு செல்லும் சக்தி

வேலைக்கு செல்லும் சக்தி

சுந்தர் மீனாட்சியை சேர்த்து வைக்க சிவா, சக்தி இருவரும் செய்யும் முயற்சிக்காக சக்தி தன் அம்மா அப்பாவுக்கு தெரியாமல் சிவா ஆபீஸில் மீண்டும் வேலைக்கு சேர்கிறாள். சக்தி, சிவா முன்னிலையில் மீனாட்சியை சுந்தருக்கு விட்டுக் கொடுத்து விடுவதாக அவளுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை கெளதம் சொல்கிறான்.

மீனாட்சி திருமணம்

மீனாட்சி திருமணம்

இதை தொடர்ந்து, நல்ல தருணம் அமையும் வரை சுந்தர், மீனாட்சி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டாம் என சிவா கட்டளையிடுகிறான். ஆனால் சுந்தர் மீனாட்சிக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை கெளதம் மூலம் அவளை தனியாக சந்திக்க திட்டம் போட்டு சந்திக்கிறான்.

 தொந்தரவு செய்யும் சக்தி

தொந்தரவு செய்யும் சக்தி

இதற்கிடையில், மீண்டும் ஆபீஸில் வேலைக்கு சேர்ந்த சக்தி பெண்களை மதிக்காமல் நடந்து கொள்ளும் சிவாவை பழிவாங்க ஆபீஸ் பெண்களுடன் சேர்ந்துக்கொண்டு போன் செய்து சிவாவை தொந்தரவு செய்கிறாள்.

திடீர் திருப்பங்கள்

திடீர் திருப்பங்கள்

தன்னை வெறுப்படைய செய்தது யார் என தெரியாமல் சிவா எரிச்சலடைகிறான். இது போன்ற சுவாரஸ்யமான கதை போக்குடன் தொடர்கிறது "பூவே பூச்சூடவா" தொடர். காணாத் தவறாதீர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
New twist on Poove Poochudava serial on Zee Tamil TV. Poove Poochudava new serial telecast on monday to friday at 8 PM.
Please Wait while comments are loading...