இடிந்து விழுந்த பொறையார் பணிமனை கட்டிடம்- 8 பேர் பலி வீடியோ!
பொறையார் அரசுப் பணிமனை ஓய்வு அறை இடிந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாகை : தீபாவளிப் பண்டிகை சிறப்புப் பணியை முடித்துவிட்டு பொறையார் பணிமனை ஓய்வறையில் தூங்கிக் கொண்டிருந்த 8 நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அதிகாலையில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், பொறையார் கிராமத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனை இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இடிந்து விழுந்த இந்த கட்டிடம் 1943ம் ஆண்டு கட்டப்பட்டதாகவும் அதற்கான கல்வெட்டுகள் இருப்பதாகவும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளாக இந்த கட்டிடத்தை புதுப்பித்துத் தர வேண்டுகோள் விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications