இலவச வீடியோ சேவை.. தமிழ்நாட்டின் கம்பம் கிராமத்தை தேர்ந்தெடுத்த அமெரிக்க ஆபாச இணையதளம்
இலவச வீடியோ சேவை அளிக்க தமிழ்நாட்டின் கம்பம் கிராமத்தை தேர்ந்தெடுத்த அமெரிக்காவின் ஆபாச இணையதளம் ஒன்று தேர்ந்தெடுத்துள்ளது
தேனி: அமெரிக்காவின் பிரபல ஆபாசப்பட இணையதளம் ஒன்று பாலியல் உந்துதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆபாசப்படங்களை இலவசமாக காட்ட இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு நகரங்கள் பட்டியலில் கம்பம் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் பிரபல ஆபாசப் பட இணையதளம் ஒன்று, இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களைத் தேர்வு செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறு நகரங்களில் தனது நிகழ்ச்சிகளை இலவசமாக வழங்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ விளம்பர வீடியோவில், தமிழ்நாட்டின் கம்பம் நகரமும் அந்த சிறுநகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக, பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில், பிற ஆபாசப்பட இணையதளங்கள் போல இல்லாமல் தங்களுக்கென்று இலக்கு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் திருமணத்திற்கு முன்பும், பின்பும் பாலியல் உந்துதல் குறித்து யாரும் வெளியில் சொல்ல விருப்பபடுவதில்லை.
அதைத் தங்களின் மனதிற்குள் வைத்து புழுங்கிக்கொண்டிருப்பார்கள். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களைப் போன்றோருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ஆபாச வீடியோக்களை காட்ட இந்த நிறுவனம் முன் வந்துள்ளது. அதன் மூலம் அவர்கள் மனச்சோர்வு குறையும் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து தேர்தெடுக்கப்பட்ட சிறுநகரங்களில், இந்தியாவில் மூன்று நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பூ என்கிற கிராமும், அஸாமில் உள்ள சுட்டியா என்கிற கிராமமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications