தமிழக அமைச்சரவையில் விரைவில் இலாகாக்கள் மாற்றம்?
தமிழக அமைச்சரவையில் விரைவில் இலாகாக்கள் மாற்றப்படலாம் என தெரிகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அமைச்சரவையில் விரைவில் இலாகா மாற்றங்களுக்கு வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஓராண்டாகிவிட்டது. தினகரன் தரப்பு இதோ.. இன்று நாளை என ஆட்சிக்கு நாள் குறித்து பார்த்தது.

ஆனால் இம்மியும் நகரவில்லை. இதனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை முன்வைத்து இலவு காத்துக் கொண்டிருக்கிறது தினகரன் தரப்பு.
இதைப்பற்றியெல்லாம் கோட்டை வட்டாரம் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. எம்.எல்.ஏக்களின் தொகுதி சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதால் அரசு சுமூகமாகவே இயங்கும் என்பதில் நம்பிக்கையோடு இருகிறது கோட்டை.
இந்நிலையில் அமைச்சரவை இலாகாக்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்கின்றனர் கோட்டை அதிகாரிகள். அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லாமல் துறைகள் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications