பள்ளி மாணவிகள் பாதுகாப்பிற்காக போஸ்ட் கார்டு திட்டம்: எஸ்.பி. தகவல்
நெல்லை: ஹலோ போலீஸ் சேவையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு திட்டத்தை எஸ்.பி. விக்ரமன் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக விக்ரமன் பொறுப்பு ஏற்றது முதல் பொதுமக்கள் அனைவரும் அவரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கும் வகையில் ஹலோ போலீஸ் சேவையை அவர் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான குற்றங்கள் தடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு அவர்களுககு எஸ்.பி.யின் முகவரி அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக கங்கைகொண்டானில் உள்ள பெண்கள் பள்ளியில் போஸ்ட் கார்டு வழங்கப்பட்டது. இது குறித்து எஸ்.பி. விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாணவிகளுக்கு சமுதாயத்திலும், பள்ளிகளிலும் நடக்கும் தீமைகளை தடுக்கும் பொருட்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவிகள் புகார் குறித்து தீவிர விசாரணை நடத்திய பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவிகள் இந்த திட்டம் மூலம் தங்களுக்கு மட்டுமல்லாது தங்கள் பகுதியில் நடக்கும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் போஸ்ட் கார்டு மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
ஹலோ போலீஸ் திட்டம் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலையிலேயே மருத்துமவனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications