பழைய நோட்டுகளை மாற்ற சனி, ஞாயிற்றுகிழமைகளில் அஞ்சலகம் செயல்படும்: தலைமை தபால் அதிகாரி
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தபால் நிலையங்கள் செயல்படும் என தலைமை தபால் அதிகாரி தெரிவித்துள்ளார்
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வசதியாக, தபால் நிலையங்களும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி 8ம் தேதி இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் பொதுமக்கள் வங்கிகளில் குவிகின்றனர். பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், வங்கிகளுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்தது. ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்துச் செல்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் வசதிக்காக வங்கிகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளைத் தொடர்ந்து, தபால் நிலையங்களும் சனி, ஞாயிறு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தபால் அதிகாரி கூறுகையில், "பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தபால் நிலையங்கள் செயல்படும். தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். இந்த இரு நாட்களிலும் சேமிப்பு கவுண்டர்களும் திறந்திருக்கும்" என்றார்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications