''கலைஞர் திமுக பொதுச் செயலாளரே.. கட்சியும் கொடியும் ரெடி...!''
மதுரை மதுரையில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒரு புதிய போஸ்டரை களத்தில் இறக்கி விட்டுள்ளனர். கலைஞர் திமுக பொதுச் செயலாளரே கட்சியும் கொடியும் ரெடி என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் இப்போது மதுரையைக் கலக்கி வருகின்றன.
மதுரையில் நாளை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை அழகிரி கூட்டியுள்ள நிலையில் தலை தூக்கியுள்ள இந்த போஸ்டர்கள் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் திமுக என்ற பெயரில் புதிய கட்சி எதையும் தான் தொடங்கத் திட்டமிடவில்லை. எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களைக் கேட்காமல் செய்ய மாட்டேன் என்று ஏற்கனவே அழகிரி விளக்கியுள்ளார். இந்த நிலையில் புதிய போஸ்டர்கள் முளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினை எதிர்த்ததால் நீக்கம்
திமுகவில் இருந்து வந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்ததாலும், அவரது ஆதரவாளர்களை அடக்கத் தவறியதாலும் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2 மாசமாகட்டும் பார்க்கலாம்
அதன் பிறகு அவ்வப்போது செய்தியாளர்களிடம் பேசி வரும் அழகிரி எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களைக் கேட்டுத்தான் செய்வேன், 2 மாசமாகட்டும் பார்க்கலாம் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

அடுத்தடுத்து அதிரடி சந்திப்புகள்
இந்த நிலையில் அடுத்தடுத்து முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் அழகிரி. விமானத்தில் போன இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் பேசியுள்ளார். டெல்லிக்குப் போய் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். சோனியாவையும் சந்திக்க முயற்சித்துள்ளார்.

ரஜினியுடன் சந்திப்பு
பரபரப்பின் உச்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தனது மகனுடன் போய்ப் பார்த்து பரபரப்பை கூட்டி விட்டார்.

நாளை ஆதரவாளர்கள் கூட்டம்
இந்த நிலையில் மதுரையில் உள்ள தனது தயா மஹாலில் ஆதரவாளர்கள் கூட்டத்தை அழகிரி கூட்டியுள்ளார். இதில் அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குப் பக்கத்தில் புது போஸ்டர்
இந்த நிலையில் அழகிரியின் மதுரை வீட்டுக்கு அருகே புதிதாக ஒரு போஸ்டர் முளைத்துள்ளது. அதில், 'கலைஞர் தி.மு.க.வின் பொதுச் செயலாளரே, கட்சியும், கொடியும் ரெடி, பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்ற வாசகங்களுடன் உள்ளது அந்த போஸ்டர்.

போஸ்டரில் யார் யார்
அந்த போஸ்டரில் மு.க.அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி, முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டரில் உள்ளது போலவே நாளை நடக்கப் போகிறதா அல்லது இது பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டரா என்பது தெரியில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications