ஸ்டாலின் பயணத்திற்கு எதிராக அதிமுக போஸ்டர் யுத்தம்
மதுரை: தமிழக அரசுக்கு எதிராக 'நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்' மேற்கொண்டுள்ள ஸ்டாலினுக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியள்ளனர்.
2016 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதி மக்களையும் சந்திக்கும் வகையில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை மூன்று கட்டமாக மேற்கொள்கிறார். முதற்கட்டமாக கடந்த ஞாயிறன்று குமரியில் தொடங்கிய ஸ்டாலின் 7ம் நாளான இன்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

போகும் இடமெங்கும் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் ஸ்டாலின். பெண்கள், சுயஉதவிக்குழுவினர், மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் ஸ்டாலின், 2016ம் ஆண்டு திமுகதான் ஆட்சிக்கு வரும் என்றும் கருணாநிதி 6வது முறையாக முதல்வராவார் என்றும் கூறி வருகிறார்.
அதிமுக திட்டம்
ஸ்டாலின் பயணத்திற்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு ஆளும் கட்சியினரை சற்றே யோசிக்கத்தான் வைத்துள்ளது. எனவேதான் குமரி தொடங்கி மதுரை வரை ஸ்டாலின் போகும் இடமெங்கும் திமுகவிற்கு எதிராகவும், நமக்கு நாமே பயணத்திற்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.
குமரியில் போஸ்டர்
கன்னியாகுமரியில் ஸ்டாலினின் பயணத்திற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில், குமரி மாவட்ட அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. திமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த நமக்கு நாமே விடியல் மீட்பு போஸ்டருக்கு பதிலடி அளிக்கும் வகையில், போஸ்டர் ஒட்டியது அதிமுக. அதில், "அதிமுகவுக்கு முடிவும் இல்லை. திமுகவுக்கு விடிவும் இல்லை. இதுதான் நமக்கு நாமே" என்று அச்சிடப்பட்டுள்ளது.
மதுரையில் கொலைகள்
மதுரை மாநகரில் தா.கிருஷ்ணன் கொலை தொடங்கி தினகரன் எரிப்பு, பொட்டு சுரேஷ் கொலை வரை பட்டியல் போட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர். மதுரையில் மட்டுமே இவ்வளவா? என்று கேட்டுள்ளனர். அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அடுத்தது யார் என்றும் கேட்டுள்ளனர்.
களமிறங்கும் பேச்சாளர்கள்
ஸ்டாலின் பயணம் செய்யும் இடங்களில் பதிலடி தரும் வகையில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில்சம்பத் தலைமையில் பேச்சாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications