கரண்ட் கட்... ஓட்டுக் கேட்டுப் போன அதிமுக வேட்பாளர்களை விரட்டியடித்த பொதுமக்கள்
திண்டுக்கல்: தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை, மின்சாரமும் அடிக்கடி தடை படுகிறது. அதை சரி செய்து விட்டு பின்னர் வாக்கு கேட்டு வாருங்கள் என தமிழகத்தின் சில இடங்களில் அதிமுக வேட்பாளர்களை பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து காமராஜர் சாலை அருகே பிரசாரம் மெற்கொண்டார் நடிகை சி.ஆர்.சரஸ்வதி. தனது பிரச்சாரத்தை முடித்து அவர் வேறு இடம் நகர முற்பட்ட போது அப்பகுதியில் மின்தடைஏற்பட்டுள்ளது.

இதனால் திறந்த வேனில் அரைகுறை வெளிச்சத்தில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் சரஸ்வதி. அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ‘பார்த்தீர்களா இது தான் உங்கள் ஆட்சியின் லட்சணம். முதலில் மின்தடையை சரி செய்து விட்டு பின்னர் ஓட்டு கேட்டு வாருங்கள்' என குரலெழுப்பியுள்ளனர்.
எங்கே தொடர்ந்து அங்கே நின்றால் பிரச்சினை பெரிதாகலாம் என அஞ்சிய சி.ஆர்.சரஸ்வதி உடனடியாக வாகனத்தை மாற்றி வேறொரு காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதேபோல், வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினியுடன் வாக்கு சேகரிக்கச் செல்ல அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவன் மறுத்துவிட்டாராம். ஏனெனில் ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மேயர் கார்த்தியாயினியுடன் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் மக்கள் காலி குடங்களுடன் அவர்களை முற்றுகையிட்டு விட்டனராம் அப்பகுதி மக்கள்.
இதனால் ‘மேயரம்மாவை பிரச்சாரத்துக்கு அழைத்துப் போனால் நிச்சயமாக எனக்கு ஒரு ஓட்டு கூட விழாது' என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் செங்குட்டுவன்.












Click it and Unblock the Notifications