தாம்பரம், கொரட்டூர், மண்ணடி மக்களே அலர்ட் ப்ளீஸ்.. நாளைக்கு உங்கள் பகுதியில் ஷட் டவுன்!
சென்னை தாம்பரம், கொரட்டூர், மண்ணடி, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தாம்பரம், கொரட்டூர், மண்ணடி, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு நாளும் மின் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் நாளை சென்னை தாம்பரம், கொரட்டூர், பம்மல், மண்ணடி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிந்தவுடன் உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்கு ஏற்ப மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
[ அதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த "ஃபிடல்.. சே".. நெட்டிசன்கள் கலகல கலாய்! ]
கொரட்டூரில் யூஆர் நகர், ருக்மணி தெரு, பார்க் ரோடு, குப்புசாமி தெரு, பாலாஜி நகர், பாண்டுரங்கபுரம், கவிதா தெரு, ஜமி காம்பவுண்ட் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்
பம்மலில் வெங்கடேஷ்வரா முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரு, அகத்தீஸ்வரர் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தெரு, வனஜா நகர், பாரதி நகர், பொழிச்சலூர் மெயின் ரோடு, எச்எல் காலணி, நல்லதம்பி சாலை பகுதி, ராதாகிருஷ்ணன் சாலை, லட்சுமி நகர் பகுதி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.
தாம்பரத்தில் வேங்கைவாசல் மெயின் ரோடு, சிவகாமி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, கவுரிவாக்கம், பிரின்ஸ் காலேஜ், பழனியப்பா நகர், சாந்தனா அம்மாள் நகர் ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணடியில் மண்ணடி தெரு, ஆர்மேனியன் தெரு, காச்சலீஸ்வரர் அக்ஹாரம், போஸ்ட் ஆபிஸ், முத்துமமாரி செட்டி, வெங்கட மேஸ்திரி தெரு, ஐயப்ப செட்டி தெரு, செம்புதாஸ் தெரு, சவரி முத்த தெரு, புதுத்தெரு, நைனியப்பன் தெரு, தம்பு செட்டி தெரு, ஜாபர் சாரங் தெரு, அங்கப்பன் தெரு, நாயக்கன் தெரு, ஆதாம் தெரு, ராஜாஜி சாலை, கோபால் செட்டி 3வது தெரு, பிராட்வே, மூர் தெரு, இப்ராஹீம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications