தமிழகத்தில் மின்வெட்டு காலம் முடிந்து விட்டது: அமைச்சர் தங்கமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சியில் 40 முதல் 90 சதவீதம் வரை மின்வெட்டு இருந்தது. முதல்வர் அம்மா ஆட்சிக்கு வந்தபிறகு அவரது தீவிர நடவடிக்கை காரணமாக மின்உற்பத்தி அதிகரித்து தடையில்லா மின்சாரம் வழங்கப்படடு வருகிறது என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.

மின்வாரிய துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு அவர் பதில் அளித்து பேசும் போது, கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மின்வெட்டு இருந்ததால்தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது என்று அந்த துறையில் அமைச்சராக இருந்தவரே கூறி இருக்கிறார் என்றார்.

Power Cut Era Over in Tamil Nadu, Says State Electricity Minister

திமுக ஆட்சியில் 40 முதல் 90 சதவீதம் வரை மின்வெட்டு இருந்தது. முதல்வர் அம்மா ஆட்சிக்கு வந்தபிறகு அவரது தீவிர நடவடிக்கை காரணமாக மின்உற்பத்தி அதிகரித்து 29.4.2016 அன்று 15 ஆயிரத்து 343 மெகாவாட் என்ற தேவை முழுவதையும் பூர்த்தி செய்து இருக்கிறது.

2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது 9537 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி ஆனது. சிறு குறு தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டது. 15.6.2015 முதல் தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது.

தற்போது மின் உற்பத்திக்காக புதிய மின்நிலையங்கள், மின்நிலைய விரிவாக்கங்கள் சூரியஒளி மின்உற்பத்தி, அனல் மின்சாரம், நீர் மின்சாரம் போன்ற மின் உற்பத்தி மூலம் 18,500 மெகாவாட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் 2021-க்குள் நிறைவு பெறும்.

தற்போது 13,500 மெகா வாட் முதல் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அதைவிட அதிகமாக மின்உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும், வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வரவும் தேவையான வழித் தடங்களை அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்க தற்போது முதல்வர் உத்தரவிட்டார். இதன்மூலம் தமிழ்நாடு மிகைமின் மாநிலமாக மாறி இருக்கிறது என்பது விளங்கும்.

காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதையும் அரசே வாங்கும் அளவு மின்கட்டமைப்பு சீரமைக்கப்பட்டுள்ளன. மின்உற்பத்தி மற்றும் மின்வாரியத்தின் சிறந்த நடவடிக்கைகளுக்காக 10 விருதுகளை அம்மாவின் அரசு பெற்றிருக்கிறது.

மின்வாரியத்தின் கடன்களை படிப்படியாக குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் தமிழக மின்சார வாரியம் லாபத்தில் இயங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+