காலை வாரிய காற்றாலை மின் உற்பத்தி... தலைதூக்கும் மின்வெட்டு
நெல்லை: கடந்த இரண்டு நாட்களாக நன்றாக கை கொடுத்து வந்த காற்றாலை மின் உற்பத்தி திடீரென வெறும் 50 மெகா வாட்டுக்கு கீழ் சென்றதால் நெல்லை மாவட்டங்களில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மின்வெட்டு நிலவி வருகிறது. மின் நுகர்வு தேவை சுமார் 13 ஆயிரம் மெகா வாட்டை நெருங்கி விட்டது. ஆனால் உற்பத்தியோ மிக குறைவாக 11 ஆயிரம் மெகா வாட் மட்டுமே கிடைக்கிறது. இதனால் வெளியிடங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. சுமார் 1000 மெகா வாட்டுக்கு மேல் வெளியிடங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது கோடை வெயில் நிலவி வருவதால் மின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மே மாதம் இரண்டாம் வாரம் முதல் காற்று பலமாக வீச தொடங்கியதால் காற்றாலைகள் சுழல தொடங்கின. இதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு மின்சாரம் கிடைத்தது. கடந்த 1 வாரத்திற்கும் மேலாக காற்றாலை மின்சாரம் கை கொடுத்து வந்தது.
கடந்த வாரம் காற்றாலை மூலம் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. நள்ளிரவு முதல் காற்றின் வேகம் குறைந்ததால் இதன் மூலம காற்றாலை மின் உற்பத்தி திடீரென சரிந்தது. அதிகாலை 633 மெகா வாட்டாக குறைந்தது. காலை 6 மணி நிலவரப்படி 50 மெகா வாட்டுக்கு கீழ் மின் உற்பத்தி சென்றுள்ளது.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு அமுலுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் காலை 7 மணி முதல் விட்டு விட்டு மின் தடை செய்யப்பட்டது.
ஜூன் 1ம் தேதி முதல் தமிழக அரசு அறவே மின் வெட்டை விலக்கி கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் காற்றாலைகள் காலை வாரியதால் மின் வாரியத்தினர் தடுமாறி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications