வர்தா புயல் தாக்குதல் எதிரொலி: கல்பாக்கம் அணுமின் நிலைய மின் உற்பத்தி நிறுத்தம்
வர்தா புயல் தாக்குலைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்தா புயல் தாக்குதலைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் சென்னையை 7 மணிநேரம் 3 கட்டங்களாகத் தாக்கியது. அப்போது வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இருப்பினும் கல்பாக்கம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 அலகுகளிலும் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications