பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்
சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசன் பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்போது களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதனையொட்டிபிரபலமான நடிக, நடிகையர் பலரும் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை நமீதா முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் தற்போது பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசனின் அரசியல் நிகழ்வு அரங்கேறியது.இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ''உடன்பிறப்புகளே! உங்களுக்காக நான்.
உங்களுக்காகவே நான்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான சீனிவாசன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர்.
மேலும் பல்வேறு மோசடி வழக்குகளுக்காக சீனிவாசன் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இமான் அண்ணாச்சி, விந்தியா, செந்தில், நமீதா வரிசையில் பவர்ஸ்டாரும் பட்டையைக் கிளப்புவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications