புழல் சிறையில் வேல்முருகனுடன் பி.ஆர் பாண்டியன் சந்திப்பு
புழல் சிறையில் இருக்கும் வேல்முருகனை விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் சந்தித்தார்.
சென்னை : தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தவாக தலைவர் வேல்முருகனை அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் நேரில் சந்தித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தமிழக அரசைக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், நெய்வேலி என் எல் சி வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
வேல்முருகன் கைதைக் கண்டித்து நாளை சென்னையில் மதிமுக சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து கட்சித் தொண்டர்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications