"தமிழ்நாடு நடிகர் சங்கம்".. ரஜினி கோரிக்கையை வரவேற்கிறேன் - பிரபு
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தக் கோரிக்கைக்கு நடிகர் பிரபு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் பெயரை மாற்றுவதைவிட நடிகர் சங்கத்தின் மேம்பாடுகள்தான் முக்கியம் என்று நடிகர் கார்த்திக்கும் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்தின் இந்த கோரிக்கையை நடிக, நடிகையர் பலரும் வரவேற்று வருகின்றனர்.

ரஜினியின் வேண்டுகோள்கள்
முதல் வேண்டுகோள், யாரு ஜெயிச்சி வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பேரை எடுத்துவிட்டு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றிவிடுங்கள்.அடுத்து, இந்தத் தேர்தலில் நல்லா சிந்திச்சு, ஆயிரம் முறை யோசிச்சி வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். ஜெயிச்சி வந்தவங்க, உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேத்தனும். அப்டி நிறைவேத்த முடியாமபப் போனா உடனே ராஜினாமா செஞ்சிடுங்க. அது உங்க மனசுக்கும் நிம்மதி. உங்களுக்கும் நற்பெயரைக் கொடுக்கும். நல்ல எடுத்துக் காட்டாகவும் இருப்பீங்க.

வரவேற்ற பிரபு
நடிகர் ரஜினிகாந்தின் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எடுத்து விட்டு தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் வரவேற்கிறேன் என்று நடிகர் பிரபு தெரிவித்து இருக்கிறார்.

கார்த்திக்
நடிகர் ரஜினிகாந்தின் இந்த கோரிக்கைக்கு நடிகர் கார்த்திக் நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவதை விட சங்கத்தின் செயல்பாடுகள்தான் முக்கியம் குறிப்பாக சங்கத்தின் மேம்பாடுகள் அவசியம் என்று கூறியிருக்கிறார்.

எஸ்.வி.சேகர்
நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன.பெயரை மாற்ற வேண்டுமானால் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நடிகரும் இயக்குனருமான எஸ்.வி.சேகர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பல நடிக, நடிகையரும் ரஜினிகாந்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications