'கியா காம் கியா இஸ்னே'.. பிரேமலதாவைப் பார்த்து சிலாகித்துப் பாராட்டிய மோடி...!
சென்னை: வெற்றிக் களிப்பில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்ய மறந்ததை பிரதமர் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி திறமையாக சமாளித்து சரிக்கட்டியதை நாடாளுமன்ற சென்ட்ரல் ஹாலில் பார்க்க முடிந்தது.
விஜயகாந்த்தையும், அவரது மனைவி பிரேமலதாவையம் தனித் தனியாக கூப்பிட்டு அத்தனை பேர் முன்னிலையிலும் மோடி பாராட்டியதுதான் அது.
இந்தப் பாராட்ட காரணமாக விஜயகாந்த்தும் சரி, பிரேமலதாவும் சரி நெகிழ்ந்து போய் விட்டனர். இந்த நெகிழ்ச்சியின் காரணமாகத்தான் ராஜபக்சேவை அழைக்கும் மத்திய அரசின் முடிவைக் கூட கண்டுக்காமல் விட்டு விட்டார் விஜயகாந்த் என்கிறார்கள்.

மத்திய ஹாலில் ஒரு உணர்ச்சிப் பெருக்கு
சமீபத்தில் மத்திய ஹாலில் நடந்த பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தின்போது விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோருடன் கலந்து கொண்டார்.

எங்கே விஜயகாந்த்.. எங்கே பிரேமலதா...
இந்த கூட்டத்தின்போது பேசிய மோடி திடீரென எங்கே விஜயகாந்த், எங்கே அவருடய மனைவி என்று கேட்டார். இதை எதிர்பார்க்காத விஜயகாந்த், உள்ளேன் ஐயா என்று கூறாத குறையாக எழுந்து நின்று மோடியை நோக்கி கையைத் தூக்கினார்.

நீங்க ஓ.கே.. உங்க மனைவி எங்கே...
அதையடுத்து மோடி, சரி, உங்களது மனைவி என்று கேட்டார். இதையடுத்து பிரேமலதா எழுந்து நின்று மோடிக்கு வணக்கம் வைத்தார்.

கியா காம் கியா..இஸ்னே...
இதையடுத்து புன்முறுவலுடன் கியா காம் கியா கிஸ்னே என்று இந்தியில் பேசினார். அதாகப்பட்டது.. என்ன ஒரு அருமையான வேலையை இவர் செய்துள்ளார் என்பது இதன் அர்த்தமாகும்.

ராஜ்நாத் சிங் செய்ய மறந்ததை
உண்மையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மோடியைப் பாராட்டிப் பேச தமிழகத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் யாரையுமே மேடைக்கு அழைக்கவில்லை. அதைத்தான் மோடி இப்படி தனித்து விஜயகாந்த்தையும், அவரது மனைவியையும் விளித்து பாராட்டி சரிக்கட்டி விட்டார்.

உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்தான்...
உண்மையில் விஜயகாந்த்தும், பிரேமலதாவும் பாராட்டுக்குரியவர்கள்தான். இருவருமே ஊர் ஊராகப் போய் தொண்டை தண்ணி வற்றும் வரை பக்கம் பக்கமாகப் பேசி தீவிரப் பிரசாரம் செய்தனர். இதை யாருமே மறுக்க முடியாது.

ராமதாஸுக்கு எவ்வளவோ மேல்...
ஆனால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸோ, தேவையில்லாமல் முறைத்துக் கொண்டு, கோபித்துக் கொண்டு மகன் தொகுதியோடு நின்று விட்டார். குறைந்தபட்சம் தனது கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் கூட அவர் போய் பிரசாரம் செய்யவில்லை. பாஜக வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்கவில்லை. கூட்டணியை அவர் கண்டுகொள்ளவே இல்லை. மகன் ஜெயித்தால் போதும் என்று தர்மபுரியோடு நின்று விட்டார்.

விஜயகாந்த்தான் பெஸ்ட்
பாஜக கூட்டணியிலேயே வைகோ உள்ளிட்ட சில தலைவர்கள்தான் சீரியஸாக பிரசாரம் செய்தனர். அதில் விஜயகாந்த்தும் ஒருவர் என்பதால் மோடிக்கும் அவரை ரொம்பவே பிடித்துப் போய் விட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications