பாஜகவை கூட்டணியில் சேர்க்காமல் அதிமுக விரட்டி விட்டதால் ஜெ. மீது அவதூறு: சி.ஆர்.சரஸ்வதி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரும் பா.ஜ.கவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று நள்ளிரவு சென்னை வந்தார்.
ஜவடேக்கர் அளித்த பேட்டியில், மத்திய அரசின் உதய் திட்டத்தை அகில உலகமே அங்கீகரித்துள்ளது. இத்திட்டம் 5 கோடி மக்கள் குறிப்பாக பெண்கள் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உதய் திட்டத்தை அமல்படுத்த பல மாநிலங்கள் முன்வந்துள்ளது. எல்.பி.ஜி எரிவாயுவுக்கும் இது ஒரு புதிய மாற்றாக இருக்கும். இது போல பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதேநேரம், தமிழக அரசு உதய் திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை என்றார் ஜவடேக்கர்.
இதுகுறித்து, அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், "உதய் திட்டம் தனியாருக்கு நலன் தரக்கூடியது என்பதால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை. தமிழக முதல்வர் வலியுறுத்திய எத்தனையோ திட்டங்களை மத்திய அரசு செய்யவில்லை.
அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்க்கவில்லை என்ற வயிற்றெரிச்சலில் ஜவடேக்கர் இவ்வாறு அவதூறு கூறிவருகிறார். தமிழக நலன் என்றால் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்" என்றார்.
முதல்வர் ஜெயலலிதாவை தன்னால் சந்திக்க கூட முடியவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார், அதை பொன்.ராதாகிருஷ்ணன் ஆமோதித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். இப்போது ஜவடேக்கர் தமிழக முதல்வர் மீது தாக்குதலை தொடங்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்க்கவில்லை என்பதுதான் இதுபோன்ற மோதல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications