ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது போலீஸில் புகார்
ஜெயலலிதா சிகிச்சை எடுப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது புதுவண்ணாரப்பேட்டை போலீஸில் ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் புகார் அளித்துள்ளார்.
சென்னை: அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் புதுவண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் இன்று வெளியிட்டார். நாளை ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நேரத்தில் மக்களை பாதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இதைத் தொடர்ந்து வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கும் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications