நாங்க நிச்சயம் 160 தொகுதிகளில் வெல்வோம்.... தினமும் அடித்து சொல்லும் பிரேமலதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக, மக்கள் நல கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி, தமிழகத்தில் 160 தொகுதிகளில் எளிதாக வெல்லும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை, திருமங்கலத்தில் இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரேமலதா. அப்போது அவர் கூறியதாவது: தேமுதிக, மக்கள் நல கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரும்.

ஆட்சியில் இருக்கும்போது வெளியே எட்டிப்பார்க்காத, திமுகவின் ஸ்டாலினும், முதல்வர் ஜெயலலிதாவும், தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வெளியே வருகிறார்கள். இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications