“130-160 தொகுதிகளில் வெற்றி”... மத்திய உளவுத்துறையே சொல்லி விட்டதாக பிரேமலதா பிரச்சாரம்!
தர்மபுரி: மத்திய உளவுத்துறையின் அறிக்கைப்படி தமிழகத்தில் 130 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியோடு கை கோர்த்துள்ளது. இதனால், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், தர்மபுரி மாவட்டத்தின் 5 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வேன் மூலம் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

கருத்து திணிப்புகள் தான்...
அதிமுக இனி லெட்டர் பேடு கட்சியாகப் போகிறது. திமுக, இல்லாமல்போன கட்சியாகி விட்டது. பல்வேறு சேனல்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே கருத்து திணிப்புகள்தான்.

ரகசிய அறிக்கை...
மத்திய உளவுத்துறையின் அறிக்கை ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில், ‘தமிழகத்தில் 130 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் நடக்கும்...
விஜயகாந்த் முதல்வராவதும் கூட்டணி தலைவர்கள் அமைச்சர்கள் ஆவதும் உறுதி. இந்த கூட்டணி தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை தரப்போகிறது.

வாக்குகளை வீணாக்காதீர்கள்...
எனவே நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். தமிழக மக்களின் வளர்ச்சி முக்கியம். எனவே மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்" என இவ்வாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications