திமுகவை விஜயகாந்த் விமர்சிக்கவில்லை, ஆனால் பிரேமலதா திட்டியிருக்கிறாரே.. அப்படியென்றால்?
சென்னை: உளுந்தூர்ப்பேட்டை தேமுதிக மாநாட்டின் சாராம்சம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் எதுவுமே புலப்பட மாட்டேன் என்கிறது. அந்த அளவுக்கு விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவின் பேச்சுக்கள் குழப்பமாகவே உள்ளன.
இந்த மாநாட்டில் விஜயகாந்த் அதிமுகவைக் கடுமையாக சாடிப் பேசினார். அதேபோல பிரேமலதாவும் பேசினார்.
விஜயகாந்த் திமுகவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜக குறித்துப் பேசவில்லை. ஆனால் பிரேமலதா, திமுகவை சாடிப் பேசினார். தேமுதிகவை அழிக்கப் பார்க்க கட்சி என்று திமுகவை கடுமையாகவே சாடினார்.
இப்படி இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பேசியிருப்பதால் இவர்கள் யார் பக்கம் சாதகப் பார்வை பார்க்கிறார்கள் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆவேச விஜயகாந்த்
விஜயகாந்த் மாநாட்டில் மிக ஆவேசமாக அதிமுக ஆட்சியை விமர்சித்துப் பேசினார். போலீஸைத் தாக்கினார், அதிமுக ஆட்சியைத் தாக்கினார்.

திமுகவை மறந்தார்
ஆனால் தப்பித் தவறிக் கூட திமுக குறித்து அவர் எதுவும் பேசவில்லை. விமர்சிக்கவும் இல்லை.

குத்திக் காட்டிய பிரேமலதா
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திமுகவையும் அவர் விடவில்லை.எப்படி அதிமுகவை சாடினாரோ அதே போல திமுகவையும் அவர் சாடினார்.

பாஜகவை மட்டும் திட்டவி்ல்லை
அதேசமயம், விஜயகாந்த்தைப் போலவே பிரேமலதாவும் பாஜக குறித்துப் பேசவில்லை. கணவனும், மனைவியும் இந்த விஷயத்தில் மட்டுமே ஒரே மாதிரியாகப் பேசினர்.

திமுக மீது பிரேமலதாவுக்கு கோபம் ஏன்
பிரேமலதா பேச்சில்தான் திமுகவை அதிகம் சாடினார். 2ஜி குறித்துப் பேசினார், தேமுதிகவை அழிக்க நினைத்த கட்சி திமுக என்றார். இதை திமுக தரப்பில் ரசிக்கவில்லை என்கிறார்கள்.

விருப்பமே இல்லாத விஜயகாந்த்
உண்மையில் தி்முகவுடன் கூட்டு சேருவதில் விஜயகாந்த்துக்கும் கூட விருப்பம் இல்லை என்றே சொல்கிறார்கள். இதனால்தான் அவர் தேவையில்லாமல் அந்த நிபந்தனை இந்த நிபந்தனை என்று சொல்லி காலம் கடத்துகிறார் என்றும் விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

பிரேமலதா முடிவு செஞ்சுட்டா
அதேசமயம், பாஜக கூட்டணி என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறாராம். மனைவி சொல்லை விஜயகாந்த் மதிப்பார் என்பதால் பாஜக பக்கம் அவர் சாய்வதே நடக்கும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
இவங்க ஏதாவது ஒரு முடிவு எடுத்து அதை அவர்களே அறிவிக்கும் வரை எதுவுமே தெளிவாக இருக்காது... என்பதை இந்த உளுந்தூர்ப்பேட்டை கூட்டமும் நிரூபித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications