ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில் பிற கட்சியினரை வளைக்கும் மு.க. ஸ்டாலின்... பிரேமலதா சாடல்
சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத விரக்தியில் மாற்று கட்சியினரை வளைத்து வருகிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையில் டெபாசிட்டையே பறிகொடுத்தார். தற்போது தேமுதிகவின் முரசு சின்னமும் பறிபோய்விட்டது.
இத்தனை படுதோல்விக்கும் காரணமே விஜயகாந்த் மனைவி பிரேமலதாதான் என அக்கட்சியில் இருந்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்து வரும் மாவட்ட செயலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது கட்சியில் இருக்கும் மாவட்ட செயலர்களும் தாங்கள் தொண்டர்களாக மட்டுமே இருந்துவிடுகிறோம். பொறுப்புகளில் இருந்து நீக்கி விடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவுக்கு அச்சம்
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை பிரேமலதா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேமுதிகவைக் கண்டு அதிமுகவுக்கு கடுமையான அச்சம் ஏற்பட்டுள்ளது.

விரக்தியில் ஸ்டாலின்
ஆட்சியைப் பிடிக்க முடியாத விரக்தியில் இருக்கிறார் திமுக பொருளாளர் ஸ்டாலின். இதனால்தான் மாற்று கட்சியினரை அவர் வளைத்துப் போடுகிறார்.

விஜயகாந்த் அறிவிப்பார்
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். நிச்சயம் உரிய நேரத்தில் விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிடுவார்.

மக்கள் மாற வேண்டும்...
தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் மாறினால்தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இது மக்களின் கைகளில்தான் உள்ளது. இவ்வாறு பிரேமலதா கூறினார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications