முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை பிரேமலதாவிடம் அவமானப்பட வைத்த இடதுசாரிகள்!!
சென்னை: தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணியை விஜயகாந்த் அணி என கூப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை- குறைந்து போய்விடாது என்று முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவுக்கு விஜயகாந்த் மனைவி பிரேமலதா காட்டமான பதிலைக் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நல்லகண்ணுவை அறிவிக்கலாம் என ஒருதரப்பு கூறிக் கொண்டிருக்கும் போதே விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது அந்த அணி. அத்துடன் தேமுதிக+ மக்கள் நல கூட்டணி இனி "கேப்டன் விஜயகாந்த் அணி" என அறிவிக்கப்படும் என்று வைகோ அறிவித்தார்.

வைகோவின் இந்த அறிவிப்புக்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன. முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு, அப்படியெல்லாம் ("கேப்டன் விஜயகாந்த் அணி") நாங்க யாரும் சொல்லலை; அவங்களும் சொல்லலை" என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் விஜயகாந்த் அணி என்று சொன்னால்தான் தெரியும். விஜயகாந்த் அணி என்று சொல்வதால் குறைந்து போய்விடாது; யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று காட்டமாக கூறினார்.
நாட்டின் விடுதலைக்காக போராடி சிறைவாசம் அனுபவித்த பெரியவர் நல்லகண்ணுவை பிரேமலதா போன்ற நேற்று முளைத்த "தலைவர்களிடம்" அவமானப்பட வைத்துவிட்டனரே இடதுசாரிகள்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications