மதுக்கடையை திறந்த ஜெ.விடமே அவ்வையார் விருதை திருப்பி கொடுத்திடுங்க சாந்தி ரங்கநாதன்.. பிரேமலதா
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ள ஜெயலலிதா வழங்கிய அவ்வையார் விருதினை மதுவை ஒழிக்கப் போராடும் சாந்தி ரங்கநாதன் திரும்பி அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசி அருகே நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் 4 ஆண்டுகளில் விலைவாசி உயர்ந்துவிட்டது. 2016 இல் ஜெயலலிதாவை முதல்வராக விடமாட்டேன். கூட்டணிக்கு இன்னும் நேரம் உள்ளது. அப்போது பார்த்துக்கலாம். தன்னைவிட யாரையும் பெரியவராக்க விடாதவர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும்.

சீனப் பட்டாசு எப்படி வந்தது எனக் கேட்கிறார்கள். இதை கண்டுபிடிப்பது யாருடைய பொறுப்பு. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு வழங்கவில்லையே என்றார்,
அதைத்தொடர்ந்து பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, 110வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்ததில் ஒரு திட்டமாவது நிறைவேற்றியது உண்டா?. தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகளை திறந்துள்ள ஜெயலலிதா மதுவை ஒழிக்க வாழ்நாள் முழுவதும் போராடும் சாந்தி ரங்கநாதனுக்கு அவ்வையார் விருதை வழங்குகிறார்.
சாகித்ய விருதை பலரும் திரும்ப கொடுத்ததைப் போல இந்த விருதை சாந்தி ரங்கநாதன் திரும்ப அளிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications