25ம் தேதி நெல்லையில் பேசப் போகிறாராம் பிரேமலதா.. என்ன பேசி குழப்புவாரோ!
நெல்லை: சட்டசபைத் தேர்தலில் தான் குழம்பியது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறது தேமுதிக. ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் விஜயகாந்த் குழம்பிப் போக காரணம என்று கூறப்படும் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 25ம் தேதி நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.
பிரேமலதா பேசுகிறார் என்றால் ஏதாவது பொடி வைத்துப் பேசுவார் என்றாகி விட்டது. இப்படித்தான் காஞ்சிபுரம் வேடல் மாநாட்டில் பிரேமலதா அதிமுக, திமுக இரண்டையும் விமர்சித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய விஜயகாந்த்தும் பிரேமலதா பேசியதையே கிட்டத்தட்ட வழிமொழிந்து பேசினார்.

அதன் பிறகுதான் திமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அதை உடனடியாக விஜயகாந்த் மறுத்து விட்டார். இதற்குக் காரணம், திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பிரேமலதா கூறியதால்தான் என்று தகவல்கள் வெளியாகின. அடுத்து பாஜகவுடன் பேசிப் பார்த்தார்கள். அதுவும் புஸ்ஸாகிப் போனது.
இந்த நிலையில் மகளிர் தின மாநாட்டில் விஜயகாந்த் சற்று தெளிவாகப்பேசி தனியாகத்தான் போட்டி என்று தெளிவாக அறிவித்தார். ஆனால் கடைசியாக மைக்கைப் பிடித்த பிரேமலதா தனித்துப் போட்டிதான், ஆனால் எங்களது கூட்டணிக்கு வருகிறவர்கள் வரலாம் என்று கூறி மிகத் தெளிவாக குழப்பிவிட்டுப் போனார்.
இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் குழம்பிப் போனது. தற்போது தேமுதிகவை இழுக்க மீண்டும் திமுக களம் இறங்கியுள்ளது. மக்கள் நலக் கூட்டணியும் முயல்கிறது. பாஜகவும் பதறுகிறது.
இந்த நிலையில், 25ம் தேதி நெல்லையில் தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரேமலதா கலந்து கொண்டு பேசப் போகிறாராம்.
இந்த கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்திக்காட்ட நெல்லை தேமுதிகவினர் உறுதி பூண்டுள்ளனராம். கூட்டம் நடத்த முக்கிய இடங்களைத் தேர்வு செய்து அனுமதி கேட்டுள்ளனராம். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து 26ம் தேதி நாகர்கோவிலும், தொடர்ந்து தூத்துக்குடியிலும் கூட்டம் நடைபெறவுள்ளதாம்.
முதல் கூட்டமான நெல்லை கூட்டத்தில் பிரேமலதா என்ன பேசப் போகிறார் என்று பலரும் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். தேமுதிகவின் நிலைப்பாட்டை அவர் நெல்லை கூட்டத்தில் வெளிப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications