கருத்துக் கணிப்புகள் பற்றி கவலைபட வேண்டாம்.. ம.ந.கூட்டணி 160 தொகுதிகளை கைப்பற்றும்: பிரேமலதா 'நச்'
ஸ்ரீபெரும்புதூர்: கருத்துக் கணிப்புகள் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி வேட்பாளர்களும் கட்சிகளின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மா.வீரக்குமாரை ஆதரித்து, சுங்குவார்சத்திரம் பகுதியில் பிரேமலதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 50 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து, தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலமாக மாற்றி விட்டன.
இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே தேமுதிக தலைமையிலான மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இக்கூட்டணி உருவானபோது மூன்றாவது அணி என்று சொன்னார்கள். ஆனால் தற்போது எங்கள் அணிதான் முதல் அணியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகும் அணியும் இதுதான்.
கருத்துக் கணிப்புகளைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் அவை உண்மையானதாக இருந்ததே இல்லை. ஆளும் கட்சி, ஆண்ட கட்சி ஆகியவற்றிடம் காசு வாங்கிக் கொண்டு ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சுமார் 700 தொழிற்சாலைகளுக்கு மேல் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. பணிப் பாதுகாப்பு இல்லை. நமது கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் உரிய வேலை வாய்ப்பும், பணிப் பாதுகாப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது புலனாய்வுத் துறை மூலமாக கிடைத்துள்ள தகவலின்படி, தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி 130 - 160 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார் பிரேமலதா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications