எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிரேமலதா விஜயகாந்த் பூடகப் பேச்சு!
காஞ்சிபுரம்: சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பதில் கிடைக்காத நிலையில் அக்கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது பிரேமலதா விஜயகாந்த்தின் பேச்சு.
காஞ்சிபுரம், வேடல் கிராமத்தில் இன்று திருப்புமுனை மாநாட்டை நடத்துகிறது தேமுதிக. இதில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் மாநாட்டுத் திடலுக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த்திடம், செய்தியாளர்கள் கூட்டம் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் கேட்டனர். அப்போது ஒரு செய்தியாளர், தேமுதிக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தன் தலைமையில் புதிய கூட்டணி அமைக்குமா என்று கேட்டபோது, அமைக்கலாம் என்று பதிலளித்தார் பிரேமலதா.

மேலும் அவர் கூறுகையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டுள்ளன. யாரும் இன்னும் இறுதி செய்யவில்லை. எனவே எதுவுமே இப்போதைக்கு இறுதியானதல்ல.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணிகள் முழு வடிவம் பெறும். அதுவரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். திருப்புமுனைகள், ஆச்சரியங்களையும் எதிர்பார்க்கலாம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
இவர் சொல்தைப் பார்த்தால் தனிக் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் விஜயகாந்த் உள்ளாரா என்ற சந்தேகம் வருகிறது. அப்படி அமைத்தால் அக்கூட்டணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதும் புரியவில்லை. வழக்கம் போல விஜயகாந்த்தே அவரது வாயால் எதாவது சொன்னால்தான் உண்டு.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications