50 ஆண்டுகால தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை: பிரேமலதா விஜயகாந்த்
நெல்லை: 50 ஆண்டுகால தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி சார்பாக பிரேமலதா விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல்கிணறு, பணகுடி, மற்றும் நாங்குநேரி தொகுதியில் உள்ள வள்ளியூர், களக்காடு, நாங்குநேரி பகுதியிலும் வேனில் நின்று ஓட்டு கேட்டார்.

பாளை சட்டமன்ற தொகுதியில் உள்ள மேலப்பாளையம், நெல்லை சட்டமன்ற தொகுதியில் உள்ள தச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. மக்கள்நலக்கூட்டணி மாபெரும் வெற்றிக்கூட்டணி. முதலமைச்சராக விஜயகாந்த் வரவேண்டும் என்று அவரது தலைமையில் உருவான இந்த கூட்டணி புதிய சரித்திரத்தை உருவாக்க வேண்டும். நான் வருகின்ற வழியில் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளித்தன. குடிநீர் பற்றாக்குறையை போக்க எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
இதன் காரணமாகவே பல தொகுதிகளில் எற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம். கிடப்பில் போடப்பட்டுள்ள கன்னடியன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்.
50 ஆண்டுகால தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை. தமிழக மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையை திறந்து உள்ளனர். அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் மீண்டும் போர் ஏற்பட்டு உள்ளது. தர்மம் வெல்ல நீங்கள் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

நாங்கள் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் கிரானைட் குவாரிகள் மூடப்படும். இளைஞர்கள், தாய்குலங்கள் ஒன்றிணைந்து எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். எனவே வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தியது போல கொள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தி வருகிறோம்.
எங்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுவதை பார்த்து விஜயகாந்த் மீது வதந்தி அவதூறு பரப்புகிறார்கள். விஜயகாந்த் தமிழக மக்களுக்கு நல்லததைதான் செய்வார். இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் மீது எந்த லஞ்ச ஊழல் வழக்குகளும் இல்லை. அப்பழுக்கற்ற தலைவர்கள்.
ஆனால் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மீது ஏராளமான லஞ்ச ஊழல் வழக்குகள் உள்ளன. எனவே தி.மு.க. - அ.தி.மு.க.விற்கு சவுக்கடி கொடுக்கும் வெற்றி அணியாக இதை மாற்றுங்கள், இதுவரை ஆண்ட வயதானவர்கள் வீட்டிற்கு போகட்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் வரலாறு படைக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications