உரிமை இல்ல.. ஓட்டு மட்டும் வேணுமா.. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க பி.ஆர். பாண்டியன் கோரிக்கை
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. இதனை கண்டிக்க ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பி.ஆர். பாண்டியன் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் அடிப்படை தேவைகள் எதுவாக இருந்தாலும் மத்திய அரசு அதனை செய்து கொடுப்பதில்லை.
வறட்சி நிவாரண நிதி அளிக்க மறுத்துள்ளது. தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறது.

மத்திய அரசு மிரட்டல்
இந்த நிலையில் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் இருக்கும் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்கிற உள்நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. இதனால் அதிமுக அமைச்சர்களை மத்திய அரசு மிரட்டி வருகிறது.

ஓபிஎஸ்ஸை வளைக்க..
அதே போன்று ஓபிஎஸ் அணியில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளையும் பெறவும் பாஜக முயன்று வருகிறது. தமிழ்நாடு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் போது தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேசி வருகிறோம்.

அதிமுகவிற்கு வேண்டுகோள் கடிதம்
இந்தத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அதன் பொறுப்பாளர் மகாலிங்கத்தைச் சந்தித்தோம். அப்போது, முதல்வருக்கும் எம்பி தம்பிதுரைக்கும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கும் கடிதம் கொடுத்துள்ளோம்.

ஓபிஎஸ் அணியிடம் கடிதம்
இதனைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்று தேர்தலை புறக்கணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் என்று அனைத்து தலைவர்களிடமும் வலியுறுத்தியுள்ளோம்.

உண்ணாவிரதம்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 1 முதல் 5ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். தஞ்சையில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications