சினிமா 100 விழாவில் ஒன்றாகத் தோன்றும் தமிழக, கேரள, ஆந்திர, கர்நாடக முதல்வர்கள்
சென்னை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வரும்
24ம் தேதி தமிழகம் வருகிறார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தென்னிந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
மேற்கொள்கிறார். நாளை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் கிளம்பும் அவர்
கர்நாடகாவுக்கு செல்கிறார். அங்கு மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ். மஹாவித்யா பீடத்தின்
ஜே.எஸ்.எஸ். மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

அதன் பிறகு வரும் 24ம் தேதி பிஜப்பூரில் சைனிக் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களை
துவங்கி வைக்கிறார். அன்று மாலை விமானம் மூலம் அவர் சென்னை வருகிறார். சென்னையில்
நடக்கும் சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக
கலந்து கொள்கிறார்.
நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர்
சித்தராமையா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர்
கலந்து கொள்கிறார்கள்.
இதையடுத்து வரும் 25ம் தேதி புதுவையில் உள்ள புதுவை பல்கலைக்கழகத்தின் 23வது
பட்டமளிப்பு விழாவில் பிரணாப் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் ஸ்ரீ அரவிந்தர்
ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு அவர் ஸ்ரீ அரவிந்தோ பன்னாட்டு கல்வி மையத்தின்
மாணவர்களிடையே உரை நிகழ்த்துகிறார்.
வரும் 26ம் தேதி காலை அவர் சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.












Click it and Unblock the Notifications