காஞ்சி சங்கர மடத்துக்கு வருகிறார் பிரணாப்.. ஜெயேந்திரரைப் பார்க்கிறார்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 24-ம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வருகிறார்.
சென்னை: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 24-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு வருகிறார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் வரும் 24-ஆம் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சிபுரத்துக்கு வருகை தருகிறார். அன்றைய தினம் தாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள விமான இறங்கு தளத்தில் இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சி அம்ம்ன் மற்றும் ஏகாம்பரநாதர் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் சங்கரமடம் சென்று சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெறுகிறார். பிறகு மடத்தில் முக்தி அடைந்த மகா பெரியவர் சங்கர சேகரேந்திர சரஸ்வதி சுவாமியின் பிருந்தாவனத்துக்கு சென்று அங்கு தரிசனம் செய்கிறார்.
அதன்பிறகு பிற்பகலில் ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாக்களில் பிரணாப் கலந்து கொள்கிறார். அன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி சவுரிராஜன், மாவட்ட போலீஸ் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஹைகோர்ட் வைத்த குட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியவர்கள் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும். இந்த வழக்கிலிருந்து கீழ் நீதிமன்றத்தால் விடுதலையும் செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் புதுச்சேரி அரசு அப்பீலே செய்யாமல் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இதற்காக சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு குட்டு வைத்தது நினைவிருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் குடியரசுத் தலைவர், ஜெயேந்திரர், விஜயேந்திரரை சந்திக்கா தனி விமானம் மூலம் காஞ்சிபுரம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications