சென்னை வந்த குடியரசுத் தலைவர்.. கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்!
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவருக்கு 9வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார்.
மூன்று நாட்களுக்கு முன் அவர் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். முழுக்க முழுக்க அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது. கடந்த 6 நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.

குடியரசுத் தலைவர்
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார். இதனால் காவேரி மருத்துவமனையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அவர் மருத்துவமனைக்கு சென்றார்.

வரவேற்பு அளித்தனர்
சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வரவேற்பு அளித்தார். உடன் அதிமுக அமைச்சர்கள் இருந்தனர்.

ஸ்டாலின் விசாரிப்பு
கருணாநிதியை சந்திக்கும் முன், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து விசாரித்தார். அதன்பின் கனிமொழியை சந்தித்தார். அவர்களுடன் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இருந்தார். சென்னைக்கு குடியரசுத்தலைவர் மூன்றாவது முறையாக வருவது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியை சந்தித்தார்
அதன்பின் மருத்துவமனையில் கருணாநிதியை அவர் நேரில் சந்தித்தார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அறையில் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இருந்தனர். இந்த புகைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications