பேரிடர் காலங்களில் விமானப்படையின் சேவை அளப்பறியது… ஜனாதிபதி பெருமிதம்
தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப் படை வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.
சென்னை: சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். அங்கு சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்தார் ஜனாதிபதி.
தாம்பரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள நேற்று சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதி, இன்று காலை 8.30 மணியளவில் தாம்பரம் விமானப்படை தளத்திற்கு பிராணாப் முகர்ஜி புறப்பட்டுச் சென்றார். 9 மணிக்கு அங்கு சென்று சேர்ந்த ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்று அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய விமானப்படை வீரர்களை கவுரவித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அளப்பறிய சேவை
தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றத்தில் விமானப்படை வீரர்களின் பங்கு அளப்பறியது. பேரிடர் காலங்களில் விமானப்படை வீரர்களின் பணி சிறப்பாகவே இருந்து வருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்திய விமானப்படை சிறந்து விளங்குகிறது. இந்தியா மிக வலிமையான நாடாக உருவாகி வருகிறது.
பதான்கோட் பதிலடி
பதான்கோட் விமானப்படை தாக்குதலின் போது விரைவாக பணியாற்றி நாட்டை பாதுகாத்தவர்கள் விமானப்படை வீரர்கள். பதான்கோட் தாக்குதல் சம்பவத்துக்கு தக்க பதிலடி கொடுத்தது இந்திய விமானப்படை. வீரர்களுக்கு இயந்திரவியல் பயிற்சி மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்திய விமானப்படையின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப பயிற்சி மிக முக்கிய பங்களிக்கிறது. பயிற்சி பெற்ற வீரர்களின் நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தீவிரவாத ஊடுருவலை தடுக்க முப்படைகளும் முழு கவனம் செலுத்தி வருகின்றன என்று கூறினார்.
வீரர்களின் சாகசம்
தாம்பரத்தில் விமானப்படை வீரர்கள் விமானத்தில் வானில் பறந்த படியே பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டு ரசித்தார்.
தனி கொடி
தாம்பரம் விமானப்படை தள தொழில்நுட்ப பிரிவுக்கு தனி கொடியை பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரப்படுத்தினார். முன்னதாக, வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications