வேலைவாய்ப்பின்மையால் பாஜகவுக்கு எதிராக இளைஞர்கள் திரளுகின்றனர்... ப.சிதம்பரம் பொளேர்
வேலைவாய்ப்புகள் பறிபோனதால் பாஜகவுக்கு எதிராகத்தான் இளைஞர்கள் இருக்கின்றனர் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: வேலைவாய்ப்பின்மையால் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இளைஞர்கள் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:

வாரணாசி பல்கலைக் கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலில் பாஜகவின் ஏபிவிபி தோல்வியைத் தழுவியுள்ளது. இளைஞர்கள் பாஜகவுக்கு எதிராக இருப்பதையே இது காட்டுகிறது. நாட்டின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்து கவலைப்படுகின்றனர்; ஆனால் பாஜக அவர்களது கவனங்களை சிதறடிக்கும் வேலைகளை செய்கிறது.
Youth concerned with jobs but BJP offers distractions, not jobs. That is the disconnect.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 5, 2017
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் சிறு வர்த்தகம் முழுமையாக முடங்கிப் போய்விட்டன. வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன.
Price of demonetisation and flawed GST: small businesses closed, jobs lost.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 5, 2017
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் தங்களது வர்த்தகம் 60% பாதிப்படைந்துவிட்டதாக காலணித் தொழில் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மக்களின் அதிகாரப்பூர்வமான வேதனை குரல் இது.
Demonetisation and GST caused 60% drop in business, says a Footwear federation. That is authentic voice of people.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 5, 2017
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ABVP defeat in all seats in Varanasi state university students union elections says a lot: youth against BJP.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 5, 2017












Click it and Unblock the Notifications