முதலில் மனைவி, அடுத்து காதலி.. கல்லூரி மாணவரின் காமவேட்டையால் கொலையாளியான மதபோதகர்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: மனைவியையும், காதலியையும் மடக்கி உல்லாசம் அனுபவித்த, கல்லூரி மாணவனை ஆள் வைத்து கொலை செய்து வாய்க்காலில் வீசிய கிறிஸ்த மத போதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் அருளாளன் (25). கல்லூரி மாணவர். கோபிச்செட்டிப் பாளையம் அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோபி, போலீசார், அந்த உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கோபி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

கல்லூரி மாணவர்

கல்லூரி மாணவர்

அருளானந்தன், கோபியில் உள்ள கல்லூரியில் எம்.ஏ.முதலாமாண்டு படித்து வந்தார். அருளாளனுக்கு நன்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் கால் தவறியோ, குதித்து தற்கொலையோ செய்திருக்க முடியாது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால், அருளானந்தன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார், அந்த கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டனர்.

மதபோதகர் மனைவியிடம்..

மதபோதகர் மனைவியிடம்..

அப்போது கிடைத்த விவரங்கள் வருமாறு: மாணவர் அருளாளன் கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேரம் கிடைக்கும் போது ஊழியராக பணிபுரிந்தார். இந்த ஆலயங்களில் மதபோதகராக இருந்தவர் பிராங்களின் பால் (37). இவரது மனைவி பெயர் கவுரி. கிறிஸ்தவ ஆலயங்களில் சேவகம் செய்த போது அருளாளன் அடிக்கடி பிராங்களின் பால் வீட்டுக்கு சென்று வருவாராம். அப்போது அவருக்கும் மதபோதகர் மனைவி கவுரிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

காதலியையும் விடவில்லை

காதலியையும் விடவில்லை

கள்ளக்காதலர்கள் நெருக்கமாக இருந்துபோது, பிராங்களின் பால் பார்த்துவிட்டார். ஏன், கள்ளக்காதல் வைத்துக்கொண்டாய் என்று மனைவியை கண்டித்ததால், அவர் கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதும் மதபோதகர் பிராங்களின் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவரை திருமணம் செய்ய திட்டமிட்டார். ஆனால், அந்த பெண்ணையும் அருளாளன், தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

கொலை திட்டம்

கொலை திட்டம்

மனைவியை மட்டுமின்றி, தனது காதலியிடமும் அருளானந்தன் உல்லாசம் அனுபவித்து வந்ததை பார்த்த பிராங்களின்பால் கடும் ஆத்திரம் அடைந்தார். அருளாளன் உயிரோடு இருந்தால்தானே, நமக்கு தொல்லை தருவார், எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டிக்கொண்டார் மதபோதகர் பிராங்களின் பால்.

குளிர்பானத்தில் விஷம்

குளிர்பானத்தில் விஷம்

அருளானந்தனை கொலை செய்வதற்காக, கல்லூரி மாணவர்கள் சிலரிடம் பேசி மனதை மாற்றி சம்மதிக்க வைத்தார் பிராங்களின். அந்த கல்லூரி மாணவர்கள், கடந்த 6ம் தேதி டி.என்.பாளையத்துக்கு அருளாளனை வரவழைத்தனர். அங்கு ஒன்றாக இருந்து அரட்டையடிப்பது போல நடித்தபடி, விஷம் கலந்த குளிர்பானத்தை அருளானந்தத்திற்கு அம்மாணவர்கள் கொடுத்துள்ளனர்.

வேனில் கடத்தல்

வேனில் கடத்தல்

சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அருளாளன் அங்கேயே மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதபோதகர் பிராங்களின் பால் மகிழ்ச்சியுடன் அங்கு வேனுடன் வந்தார். மற்ற மாணவர்கள் உதவியுடன் அருளாளனை வேனில் ஏற்றினார். பிறகு கோபி நோக்கி வந்தனர். சிறிது நேரத்தில் அருளாளன் இறந்து விட்டார். வழியில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதை கண்டு தண்ணீரில் போட்டால் தவறி விழுந்து இறந்திருப்பார் என போலீசார் கருதி விடுவார்கள் என எண்ணி அருளாளன் பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர்.

சிக்கினார்கள்

சிக்கினார்கள்

பிறகு யாருக்கும் எதுவும் தெரியாததுபோல் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். போலீஸ் பிடியில் சிக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் அவர்கள் வசமாக சிக்கிக்கொண்டனர். மாணவர் கொலை வழக்கில் மதபோதகர் பிராங்களின்பால், மாணவர்கள் அருள் குமார்(18), நாகராஜ் (18), கார்த்திகேயன், வேன் டிரைவர் ஜான் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான மாணவர்கள் 3 பேரும் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். கல்லூரி மாணவரை மதபோதகர் கொலை செய்த சம்பவம் கோபி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+