தம்பிக்காக காவலர் தேர்வு எழுதிய சிறை வார்டன்… வேலைக்கு வந்தது உலை
தம்பிக்காக காவலர் தேர்வு எழுதிய சிறை வார்டன் கண்காணிப்பாளரிடம் சிக்கினார். இதனால் அவரது வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி: காவலர் எழுத்து தேர்வில் தம்பிக்காக தேர்வு எழுதியவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ராமசந்திரபுரத்தை சேர்ந்தவர் வீரபாகு. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ராஜா என்பவர் கடந்த 2013ம் சிறை காவலர் தேர்வு எழுதி தற்போது வேலூர் மத்திய சிறையில் பணியில் உள்ளார்.

இந்நிலையில் இவரது தம்பி முருகன் படித்து விட்டு சீருடை பணியாளர் தேர்வு எழுத விரும்பினார். தம்பியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு விடுப்பு எடுத்து ஊர் திரும்பிய ராஜா தனது பணியை மறைத்து தானும் புதிதாக பங்கேற்க விரும்புவதாக கூறி தனக்கும், தனது தம்பிக்கும் அடுத்தத்து விண்ணப்பம செய்தார். இதனால் இருவருக்கும் அடுத்தடுத்து விண்ணப்பம் மற்றும் தேர்வு எண் வழங்கப்பட்டது.
இருவரும் தூத்துக்குடி முள்ளக்காடி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதினர். தேர்வு துவங்கியதும் ராஜா தனது விடைத்தாளை விரைவாக நிரப்பி விட்டு தனது தம்பியின் விடைத்தாளை வாங்கி வினாக்களுக்கு பதில் எழுதினார். இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோயில் எஸ்ஐ பிற கண்காணிப்பாளர் உதவியுடன் மடக்கி பிடித்தார். இதில் இருவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களிடம் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications