விலங்கை கழற்ற மறுத்த பெண் ஏட்டை தாக்கிய கைதி!
தருமபுரி: தருமபுரியில் கை விலங்கை கழற்ற மறுத்த பெண் போலீஸை தாக்கியதாக விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கீழ் செங்குட்டை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் மீது பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஏ.பள்ளிப்பட்டி காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
கடந்த மாதம் பிரபுவை கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பிரபுவை அரூர் காவல்நிலைய தலைமைக்காவலர் காவேரி மற்றும் ஆயுதப்படை போலீஸார் பரமேஸ்வரி துர்காதேவி ஆகியோர் நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் பிரபுவை ஆஜர்படுத்திய பின்அவரைக்கூட்டிக்கொண்டு மீண்டும் சேலம் செல்வதற்காக பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் அவர்கள் காத்திருந்தனர்.
அப்போது தன்னுடைய கையில் போட்டிருக்கும் விலங்கை அவிழ்த்து விடுமாறு போலீஸாரிடம் பிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு தலைமைக்காவலர் காவேரி மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரபு, காவேரியை விலங்குடன் கூடிய கையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகத்திலும் தலையிலும் காயமடைந்த நிலையிலிருந்த தலைமைக்காவலர் காவேரியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
போலீஸ் ஏட்டை தாக்கியதாக போலீஸார் பிரபு மீது மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்து சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications