கோர்ட்டுக்குள் புகுந்து கைதியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கும்பல்!
சென்னை: சென்னை பூந்தமல்லி கோர்ட் வளாகத்தில் கைதி ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, நெசப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி வரதன் (34). இவர் மீது 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர், கடந்த 2010-ஆம் ஆண்டு பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரைக் கொலை செய்த வழக்கின் விசாரணைக்காக வேலூர் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அழைத்து வரப்பட்டார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் மக்களோடு மக்களாக மறைந்திருந்த ஒரு கும்பல், திடீரென வரதனை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதை கண்ட போலீஸார் அங்கிருந்து ஓடினர். பாதுகாப்பில்லாமல் விடப்பட்ட வரதனை அந்தக் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. அதன் பின்னர் அவர்கள் ஓடி விட்டனர். அதன் பின்னர் ஓடி வந்த போலீஸார், உயிருக்குப் போராடிய வரதனை, சிகிச்சைக்காக போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரதன் உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் விஸ்வநாதனை கொலை செய்த வழக்கில் வரதன் முக்கியக் குற்றவாளியாக உள்ளார். எனவே விஸ்வநாதன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக வரதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கை நிறைய துப்பாக்கி வைத்திருந்தும் வரதனைக் கொன்ற கும்பலை தடுக்கவோ, சுட்டுப் பிடிக்கவோ போலீஸார் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை போலீஸாரின் கண் முன்பாக, அதுவும் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் கண் முன்பாக நடந்ததால் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications