தமிழகத்தில் மே1 முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கிவருகின்றன. தற்போது விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது,
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சமீபத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை காரணமாக வைத்து தமிழகத்திலும் பஸ் கட்டண உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்.
சாய்வு வசதி உடைய சொகுசு ஏர் பஸ்சுக்கு ரூ. 20, வோல்வோ பஸ்சுக்கு ரூ. 30, படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி. பஸ்சுக்கு ரூ. 50 உயர்த்தப்பட உள்ளது.
தேர்தலை முன்னிட்டு பஸ் கட்டண உயர்வை அமல்படுத்த இத்தனை நாட்களாக மாநில அரசு தடுத்து வைத்திருந்ததாகவும், இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால் ஆம்னி பஸ் உரிமையாளர்களை அரசு தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் பர்வீன் அளித்துள்ள ஒரு பேட்டியில்:
டீசல், உதிரிபாகம், டயர் விலை உயர்வு, காப்பீட்டு தொகை அதிகரிப்பு, சுங்க சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
ஆம்னி பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக பஸ்களிலும் கட்டண உயர்வு அமலாகுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications