திருப்பூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் பலி - 40 பேர் படுகாயம்
திருப்பூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலயாகினர்.
Recommended Video

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தாராபுரம் சென்ற தனியார் பேருந்தும், தாராபுரத்தில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த தனியார் பேருந்தும் கொடுவாய் அருகில் வந்து கொண்டு இருக்கும் பொழுது இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விபத்தை பார்த்த பொதுமக்கள் விபத்தில் பலத்த காயமடைந்து சிதறி கிடந்தவர்களை மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தப் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த ஊதியூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர் செல்போனில் பேசிக்கொண்டு அதிவேகமாக பேருந்தை இயக்கியதால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த பேருந்து விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications