தமிழகத்தில் தனியார் பால்விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் தனியார் பால்விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஆவின் பாலை விட தனியார் பால் விலை அதிகமாகவே இருந்து வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் பால் விற்பனை விலை அதிகரித்த நிலையில் திருமலா நிறுவனம் மீண்டும் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அச்சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே இருந்து வரும் முன்னணி பால் நிறுவனமான ஆரோக்யா நிறுவனம் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் முதல் வாரத்தில் தங்களுடைய பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 வீதம் மொத்தம் ரூ.4 வரை உயர்த்தியது.
இதே போன்று பன்னாட்டு பால் நிறுவனமான திருமலா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்த வித முன்னறிவிப்பும் வெளியிடாமல் 200 கிராம் தயிர் பாக்கெட்டில் 0.25 அளவை குறைத்து ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் 57 காசுகள் வரை மறைமுகமாக விலையேற்றத்தை மக்கள் மீது திணித்தது. அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் பால் விற்பனை விலையையும் உயர்த்தியது.
இதர பால் நிறுவனங்களும் தங்களது பால் மற்றும் தயிருக்கான விலையை ஒரு சில நாட்களில் உயர்த்தும் ஆபத்து உள்ளது. எனவே இந்த தனியார் பால் விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பால் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications