For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிக கட்டணம் வகித்தால் உரிமம் “அம்பேல்” – தனியார் பள்ளிகளுக்கு கமிட்டி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் இந்த கல்வி ஆண்டில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி எஸ்.ஆர் சிங்காரவேலுவை தலைவராக கொண்டு கமிட்டி செயல்படுகிறது. இந்த கமிட்டியிடம் நேற்று பம்மலைச் சேர்ந்த எல்.கே.ஜி முதல் 5 ஆவது வகுப்பு வரை உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளிக்கூடம் தொடர்பாக ஒரு புகார் தெரிவித்தனர்.

Private schools can collects only desired fees amount…

அதற்கு பதிலளித்த நீதிபதி, " நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விருப்பம் இல்லாமல் மாற்றுச்சான்று அந்த பள்ளியில் வழங்கக்கூடாது" என்றும் கூறினார். மேலும், "தமிழ்நாட்டில் எந்த ஒரு தனியார் பள்ளியும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது.

அவ்வாறு வசூலித்த பள்ளிகள் கூடுதலாக வசூலித்த பணத்தை மாணவர்களிடம் திரும்ப கொடுத்துவிட்டது. அவ்வாறு கூடுதலாக வசூலித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும்.மேலும், அப்பள்ளிகளின் உரிமம் கூட ரத்து செய்யப்படலாம்" என்று நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தெரிவித்தார்.

English summary
Court announced and ruled that private schools cannot collect more fees to the academic year. It is a big offence, committee says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X