ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. திமுக ஆதரவு சேனலில் ஆரம்பித்தது அதிமுக அட்டாக்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. என்று தொடங்கும், டிரேட் மார்க் அரசு எதிர்ப்பு விளம்பரத்தை கையில் எடுத்துள்ளது சன் டிவி.
கடந்த 2011 சட்டசபை தேர்தலாகட்டும், 2006 சட்டசபை தேர்தலாகட்டும், தேர்தல் விளம்பரங்களின் ஹீரோ என்றால், அது ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. என தொடங்கும் பாடல்தான்.

2006 சட்டசபை தேர்தலின்போது, அப்போதைய ஆட்சியாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக இந்த பாடலின் பின்புலத்தில் அந்த 5 ஆண்டு காலத்தில் நடந்த கொடுமைகள் காட்சிகளாக சன்டிவியில் காட்டப்பட்டன. அதேபோல, 2011 சட்டசபை தேர்தலிலும் ஜெயா டிவி இதேபோல திமுக ஆட்சிக்கு எதிராக விளம்பரம் ஒளிபரப்பியது.
ஒருகட்டத்தில் இரு தரப்புமே, இதே பாடலை வைத்து, எதிர் தரப்பு ஆட்சிகளில் நடந்த அவலங்களை விளம்பரமாக காட்டினர். பொதுவாக அப்போது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எதிரான விளம்பரங்களுக்கு வரவேற்பு கிடைத்துவிடும். எதிர்க்கட்சியாக இருப்போர் வென்றுவிடுவார்கள்.
இம்முறையும், ஞாபகம் வருதே விளம்பரங்களை சன்டிவி கையில் எடுத்துள்ளது. சன் நியூஸ் தொலைக்காட்சியில், டாஸ்மாக் எதிர்ப்பு பாடகர் கோவன் கைது, ஜல்லிக்கட்டு விவகாரம், விவசாயிகள் கஷ்டம், மின்வெட்டு, பழுதான பஸ்கள் என வரிசையாக காட்சிகள் காண்பிக்கப்பட்டு பின்னணியில் இந்த பாடல் ஒலிக்கிறது.
கைதுக்கு காரணமாக இருந்த, கோவனின் டாஸ்மாக் எதிர்ப்பு பாடல்களை அவ்வப்போது சன் நியூஸ் ஒளிபரப்பி வருகிறது. மது விலக்கை படிப்படியாக அமல்படுத்துவேன் என்று ஜெயலலிதா அறிவித்ததை கேலி செய்து, போங்கு.. என தொடங்கும் பாடலை கோவன் பாடியிருந்தார். அப்பாடல்களையும் சன் நியூஸ் அவ்வப்போது ஒளிபரப்பி வருகிறது. மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்தும் வகையிலான செய்திகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா தரப்பில் இருந்து என்ன மாதிரி எதிர்விளைவுகள் காட்டப்படும் என்பதை ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நடுநிலை வாக்காளர்கள், இரு தரப்பும் போட்டிபோட்டு தவறுகளை கூறிக்கொள்வதை ரசிக்க காத்திருக்கிறார்கள்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications