புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்கிறார்கள் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்? பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் இன்று இரவு பெங்களூரு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் இன்று இரவு பெங்களூரு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக அணிகள் இணைந்து ஒன்றாகியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது டிடிவி தினகரன் தரப்பு. அதே போல எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் கடந்த 3 நாட்களாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ரிசார்ட் முன்பு ஒன்றுகூடி தினகரன் எம்எல்ஏக்கள் வெளியேற ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினகரனுக்கு எதிராகப் போராட்டம்
அப்போது தினகரன் உருவ பொம்மையையும் எரித்தனர். மேலும் அதிமுகவில் உண்மையான அதிமுக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பே என்றும், தினகரன் தரப்பினர் துரோகிகள் என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஒட்டல் நிர்வாகம் எதிர்ப்பு
இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும், தனியார் ரிசார்ட் நிர்வாகம் 24ம் தேதி இரவுக்குள் (இன்று) அங்கிருந்து காலி செய்யக் கூறியுள்ளது. இதனால் தினகரன் தரப்பில் பரபரப்பு நிலவுகிறது.

பாஜக பின்னணி
தினகரன் தரப்பினரை புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற டெல்லி பாஜக தலைமையும், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், வரும் 25ம் தேதி முதல், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தங்களது விடுதிக்கு வரவுள்ளதாக அந்தச் சொகுசு ரிசார்ட் நிர்வாகம் கூறியுள்ளது.

பெங்களூரு பயணம்
வேறு வழி இல்லாமல் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கிச் செல்ல உள்ளார்கள். அங்கு உள்ள பிரபல நட்சத்திர சொகுசு ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கப்படவுள்ளார்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications