'பாண்டி டேஸ்' 4: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் ஜாலி வாக்கிங்!
புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டு இன்றோடு 4 நாட்களாகிறது. முதல் நாள் தொடங்கி இன்றுவரை அவர்கள் சொகுசு வாழ்க்கையில் திளைக்கிறார்கள் என்று அதிரவைக்கிறார்கள் புதுவை அதிமுகவினர்.
புதுச்சேரி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து சென்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு இன்றோடு 4 நாட்களாகிறது.
இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. சென்ற முறை கூவத்தூர் ரிசார்ட் விடுதியில் தங்கவைக்கப்பட்ட போது என்னென்ன கூத்துக்கள் அரங்கேறியதோ அதே போல இங்கும் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் தனியார் சொகுசு ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல் ஏக்கள் 19 பேரும் , வெளியே வராமல் ரிசார்ட் பகுதியிலேயே ஜாலியாக பொழுதை கழித்துவருகிறார்கள். காலையில் வாக்கிங், சூடாக டிபன், மதியம் அறுசுவை மற்றும் கறி விருந்து இரவில் மது விருந்தென களை கட்டியுள்ளது அவர்களின் 'பாண்டி டேஸ்'.
இந்த நிலையில் அந்த எம் எல் ஏக்கள் என்ன செய்தாலும், அவர்களின் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று சீசா விளையாட்டு, நீச்சல் , வாலிபால் என்று பிசியாக இருந்தனர் அவர்கள்.
Morning visuals of #AIADMK MLAs backing TTV Dinakaran lodged in #Puducherry's Windflower Resort. pic.twitter.com/6M9g7B6y94
— ANI (@ANI) August 25, 2017
இன்று காலை எம் எல் ஏ தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் கடற்கரை மணலில் 'ஜாலி வாக்கிங் ' சென்ற போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications